திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே கோட்டில்! சட்டமன்றத்தில் நடந்த சம்பவம்!  - Seithipunal
Seithipunal


மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது." என 
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கூறினார். மேலும், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு குறித்து சட்டமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு கொண்டு வந்துள்ளது. திமுக எம்.எல்.ஏ பொன்முடி பேசிய உரையில், "கிசான் திட்டம் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்ட முறைகேட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதாது, சிபிஐ விசாரணை வேண்டும்" என்று பொன்முடி தெரிவித்தார்.

அவருக்கு பின் பேசிய வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, "ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விவசாயி கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly attention to all parties


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->