முக்கிய எம்பி சஸ்பெண்ட்., வெங்கயநாயுடு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உளவு மென்பொருள் 'பெகாசஸ்' விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக, மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் உளவு மென்பொருள் 'பெகாசஸ்' குறித்து விளக்கம் அளிக்க எழுந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் அவரிடம் இருந்த கோப்புகளை பிடுங்கி கிழித்து எறிந்தார். 

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது அவைக்காவலர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பகல் 12 30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இன்று எதிர்கட்சிகளின் தொடர் அமளி குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், "அவை முடக்கப்படுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்" என்று உறுப்பினர்களிடம் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வைத்திருந்த கோப்புகளை பறித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்து மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.\


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tmc mp suspend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->