சிபிஐ, அமலாக்கத் துறை என்று, பாஜகவுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன - திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 20 இடங்களில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இது குறித்து முதலமைச்சர் கெஜ்ரிவால், "உலகின் சிறந்த கல்வி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் வீட்டில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாகவும் பல சோதனை நடத்தப்பட்டுள்ளன. வழக்கம் போல் இந்த சோதனையிலும் எதுவும் கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.

இதனை போன்றே இந்த சோதனைகளால் என்னுடைய பணியைத் தடுக்க முடியாது என்று மணீஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியினர் மீதான மத்திய பா.ஜ.க அரசின் மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், "பாஜகவுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. ஒன்று மத்திய புலனாய்வு பணியகம் மற்றொன்று அமலாக்கத் துறை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தும் உத்தி இது. சத்யேந்தர் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டார்கள். வழக்கம் போல் இந்த சோதனையிலும் எதுவும் கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC MP say about cbi raid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->