ஈரோடு கிழக்கை அதிமுக, பாஜகவுக்கு தரக்கூடாது.. தமாகா தீர்மானத்தால் ஜி.கே வாசகனுக்கு சிக்கல்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா காலமாதானத்தை அடுத்து அத்தகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து பல அரசியல் கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன.

திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அக்கட்சிக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோன்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் போட்டியிட்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் மாலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஜி.கே வாசன் சந்தித்து பேசினார். 

அடுத்தபடியாக சென்னையில் ஜி.கே வாசனை அதிமுக மூத்த தலைவர்கள் நேற்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுத்தர ஜி.கே வாசன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி வெற்றி தான் முக்கியம் என பேசி இருந்தார். 

அதேசமயம் ஈரோடு மாவட்டத்தை அடுத்த வில்லரசம்பட்டியில் ஈரோடு தமாகா தெற்கு மாவட்ட பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமாகாவின் பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞர் அணி செயலாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் "ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே தமாகா போட்டியிட்டுள்ளது.

ஆகையால் அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தலிலும் தமாகாவுக்கே ஒதுக்க வேண்டும். இதனை தலைவர் ஜி.கே வாசனிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான தீர்மானம் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்பதை ஜி.கே வாசன் முடிவு செய்வார்" என செய்தியாளர்களை சந்திப்பில் பேசியுள்ளனர். இதனால் அதிமுக கூட்டணியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMC decided Erode east should not be given to AIADMK and BJP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->