திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் இந்த வாட்ஸ்-அப் ஆடியோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசால் செயற்படுத்தி வரும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும். வீடுகள் கட்டுவதற்கான ஆணையை இன்றே வழங்கவில்லை எனில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அந்த அந்த பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் செயலாளர்களை சஸ்பெண்டு செய்து விடுவேன் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கலெக்டர் கந்தசாமி  எச்சரித்து அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினார். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் இந்த வாட்ஸ்-அப் ஆடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

மாவட்ட  ஆட்சியரின் ஆடியோ தொண்டர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் திருவண்ணாமலையில் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தின் முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்திம் மாநில பொதுச்செயலாளர் பாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்ட  கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பலர் இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் வீடு கட்டி முடிக்க முடியவில்லை என இந்த திட்டத்தை ஏற்க மறுக்கின்றனர்.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் பணம் பயனாளிகளுக்கு மக்களுக்கு போதுமானதாக இல்லை. இது தொடர்பாக நடைமுறை சிக்கலை ஆட்சியரிடம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தால், எனக்கு அது எல்லாம் தெரியாது என சொல்கிறார்.

உயர் அதிகாரியாக உள்ளவர் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் பயனாளிகளுக்கு உள்ள நடைமுறை சிக்கலை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரின் இந்த செயல்பாட்டை கண்டித்து  இன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வது என்றும், நாளை மறுநாள் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலங்கள் முன்பு இந்த திட்டம் குறித்த விளக்க கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.  

மேலும் 25 ஆம் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் மாவட்ட  ஆட்சியரின் ஆடியோ குறித்து முறையிடுவது என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiruvanmalai collecter audio


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->