லவ்வர்ஸ், பெண்களுக்கு இலவச மதுபானம் - ஹோட்டலை திறந்துவைத்த திமுக மேயர் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் : அண்மையில் திமுகவினரால் தொடங்கிவைக்கப்பட்ட தனியார் விடுதி ஒன்றில் டிஜே பார்ட்டி நடக்க உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள 'ட்வின் பெல்ஸ்' என்ற தனியார் விடுதி ஏற்பாடு செய்திருந்த டிஜே பார்ட்டில், ஜோடியாக வருபவர்களுக்கும், பெண்களுக்கும் இலவச மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உதயநிதி, ஸ்டாலின் உடன் கூடிய அந்த ஹோட்டல் திறப்பு விழா விளம்பரத்தையும், ஹோட்டலின் இந்த விளம்பரத்தோடு இணைத்து, 'இந்த விடியா அரசு திறந்து வைத்தது ஹோட்டலை மட்டுமல்ல, சமூக சீர்கெட்டையும் கூட. திருப்பூரில் திமுகவினரால் திறந்து வைக்கப்பட்ட ஹோட்டலில் பெண்களுக்கு இலவச மதுவுடன் DJ பார்ட்டி" என்று சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சிகள் கடுமையாக திமுகவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், இந்த ஹோட்டல் நிர்வாகம் திமுகவினருக்கு சொந்தமானது என்ற ஒரு குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளனர்.

கடும் விமர்சனங்களுக்கு இடையே ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என்றும், இனி இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காது என்றும் உறுதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அந்த ஹோட்டலை திறந்துவைத்த திருப்பூர் மேயர் தினேஷ்குமார் (திமுக) அளித்துள்ள விளக்கத்தில், "திருப்பூர் மாநகராட்சி மங்கலம் சாலையில் 'ட்வின் பெல்ஸ்' என்ற உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றை கடந்த ஜூலை மாதம் 24-07-2022 ஆம் தேதி திறப்பு விழா செய்வதற்காக அழைக்கப்பட்ட போது சென்று திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்றேன்.

ட்வின் பெல்ஸ் என்ற நிறுவனத்தால் தற்போது நடைபெறுகின்ற எந்த நிகழ்வுகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. நேற்று பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் வரும் 17-09-2022 அன்று டி.ஜே பொழுது போக்கு நிகழ்வு நடைபெறுவதாக செய்தி அறிந்து, உடனடியாக சமூக கலாச்சார சீர்கேட்டையும் , மாநகரத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெற இருக்கிற நடவடிக்கைகளை கண்டிக்கிறேன்.

திருப்பூர் மாநகரின் மாண்புமிகு மேயர் என்ற முறையிலும், திருப்பூர் மாநகரத்தின் வளர்ச்சிக்கு, களங்கம் ஏற்படுத்துகிற நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில், திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை மேற்கொள்ள கடிதம் அளித்து, சமூக கலாச்சார சீர்கேட்டை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்கவும், தமிழக அரசிற்கும் திருப்பூர் மாநகருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நிகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டேன்.

மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்கட்சிகள் விஷமச் செய்திகளை பரப்பி வருகின்றனர் . இதனை வன்மையாக கண்டிக்கிறேன் . திருப்பூர் மாநகராட்சியின் மேயராகிய நானும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசும் ஒரு போதும் இதுபோன்ற சமூக கலாச்சார சீரழிவுக்கு துணை போகமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur DJ Party Issue DMK Mayer Statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->