3 ஆயிரத்து 600 கோடி நிதியை நாங்கள் அப்படி செய்யவில்லை என மறுத்த முதலமைச்சர்!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசிடம் வந்த 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு திருப்பி அனுப்பவில்லை என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.13 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு 19 திட்டப்பணிகளைத் திறந்துவைத்து, 11 ஆயிரத்து 571 பயனாளிகளுக்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 100 ஏரிகள் நிரப்பப்படும் என்று  குறிப்பிட்டார். 2017 - 2018 ஆண்டில் மத்திய அரசின் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சில ஊடகங்களில்   செய்தி வந்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதுபோன்று எந்த நிதியையும் தமிழக அரசு திருப்பி அனுப்பவில்லை என தெரிவித்தார்.

மத்திய அரசு குறிப்பிட்ட காலத்தில்  3 ஆயிரத்து 600 கோடி நிதியை வழங்காததால், அந்த நிதியை அடுத்த ஆண்டின் சேமிப்பாக கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three thousand crores not return


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->