திருவாரூர் இடைத்தேர்தல் இரத்து.! இணையத்தில் வறுத்தெடுக்கப்படும் தமிழிசை.!! ட்விட்டில் பதில் ட்விட் போடும் தமிழிசையை கண்டு கலங்கும் கட்சியினர்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் வரும் 28 ம் தேதியன்று இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையமானது அறிவித்திருந்தது. கஜாப்புயல் தாக்கத்தில் இருந்தே இன்னும் அங்குள்ள மக்கள் மீண்டு வராத நிலையில்., இடைத்தேர்தல் அறிவிப்பானது அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும்., தற்போது இடைத்தேர்தலை வைத்தால் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பணிகள் வழங்கப்படுவது பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது., இதனை அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்., சனிக்கிழமை திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா? என்று மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அரசியல் கட்சியினர் கேட்டபோது., அனைவரும் தேர்தலை ஒத்தி வைக்கக்கூறினர். 

இன்று காலையில் இந்திய தேர்தல் ஆணையமானது திருவாரூர் இடைத்தேர்தலை இரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் (அதிமுகவை தவிர) தங்களின் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில்., தேர்தல் இரத்து செய்யப்பட்ட சம்பவமானது சில கட்சியினரிடம் வரவேற்பையும்., சில கட்சியினரிடம் எதிர்ப்பையும் உள்ளாகியுள்ளது. 


இந்நிலையில்., திருவாரூர் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான்,தேர்தல்அல்ல,- Dr. தமிழிசை சௌந்தரராஜன்." என்று தெரிவித்துள்ளார்.


தேர்தல் இரத்து ஆனதற்கு பல கட்சிகள் நன்றி தெரிவித்து வந்தாலும்., தமிழிசை சவுந்தராஜன் தேர்தல் இரத்தை வரவேற்றதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து பல கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும்., பாஜக கட்சியானது திருவாரூர் தேர்தலில் 1000 ஓட்டுகள் கூட வாங்க முடியாது என்பதன் காரணமாக தேர்தலை திட்டமிட்டு இரத்து செய்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvaur election cancel., tamilisai answer about election cancel twitter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->