ஓபிஎஸ்-இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் வெடித்தது பிரச்னை.! அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 24 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து, தமிழக மக்களுக்கு பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் பல அதிரடி மாற்றங்களை செய்து ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதில், அதிமுக தொண்டர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 5 பேர் கொண்ட குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

* கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து அசோக் குமார் மற்றும் அம்மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டு. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவராக சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட செயலாளராக அசோக் குமாரும் மேற்கு மாவட்ட செயலாளராக பாலகிருஷ்ணா ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

* அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, அதிமுக அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன், கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பேராசிரியர் பொன்னுசாமி நியமனம் செய்து ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

* திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ராஜன்  விடுவிக்கப்பட்டு, திருத்தியமைக்கப்பட்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக சேவூர் ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தெற்கு மாவட்ட செயலாளராக சேவூர் ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டதில் அதிருப்தியடைந்த கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அவர்கள், திருவண்ணாமலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பு செய்து வருகிறார். இது விரைவில் அம்மாவட்ட அதிமுக கட்சியில் பூகம்பமாக வெடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே இது குறித்த தகவல்கள் அதிமுகவின் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai admk mla issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->