திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜாமீன் வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனம், துாண்டில்விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் வாடகை சாமியானா பந்தல் மற்றும் வாடகை பாத்திர கடையை திருபுவனத்தில் வைத்திருக்கிறார். மேலும்,   பா.ம.க. கட்சியின் திருபுவனம் முன்னாள் நகர செயலாளராக இருந்தவர்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ராமலிங்கத்தை ஒரு கும்பல் காரில் வந்து வழிமறித்து இரு கைகளையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். பலத்த காயத்தோடு துடிதுடித்தவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், மருத்துவமனை போகும் வழியிலேயே ராமலிங்கம் இறந்து விட்டார்.


 
அந்தப் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபடுமாறு கூறியவர்களிடம் இராமலிங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதுகுறித்த காணொளி ஒன்றும் வைரலாகியது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்த நிலையில், இந்த வழக்கு என்ஐஏவுக்கு (NIA - National Investigation Agency) மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் 10 பேரை கைதுசெய்த நிலையில், தலைமறைவாக இருந்த முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 5 பேரை தேடி வந்தனர்.  

இந்த நிலையில், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை தட்டிகேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், 10 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupuvanam ramalanigam murder case chennai hc order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->