#தமிழகம் : மூன்று ஆசியர்களுக்கு கொரோனா., பள்ளியை இழுத்து மூடிய மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா நோய் பரவல் உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், அந்த பள்ளியை 3 நாளைக்கு மூடி மாவட்ட நிர்வாகம் மூடி உத்தரவிட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 405 பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனி பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 

(கோப்பு படம்)

ஒரே அந்த பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்ட காரணத்தினால், இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளை மூடி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய ஐம்பத்தி ஒன்பது மாணவ -மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியருக்கும், தாராபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupur teachers affected corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->