அமமுகவிலிருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!! நொந்து போன தினகரன்!!   - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தினகரனின் அமமுக தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று அமமுகவை தொடங்கிய தினகரன் அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் பிரிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஆறு சதவிகித வாக்குகளை மட்டுமே அவரால் பிரிக்க முடிந்தது.

மக்களவை தேர்தலில் அமமுக தோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு செல்கின்றனர். இது தெடர்பாக கருத்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அ.ம.மு.க. தொண்டர்களால் உருவாக்‍கப்பட்ட இயக்‍கம். ஒரு சில தன்னலம் உள்ள  நிர்வாகிகள் வெளியே சென்றாலும் கட்சி மேலும் பலப்படும் என தெரிவித்து வந்தார். 

இந்தநிலையில், நேற்று மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அமமுகவை சேர்ந்த 19 நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தாய் கழகமான அதிமுகவில் தங்களை மீண்டும் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உடனிருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruparankundram ammk party members join in admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->