முன்னாள் அதிமுக தலைமையை புகழ்ந்து தள்ளிய திருமா..! ரஜினி, கமல் வேஸ்ட்டாம்..!  - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசியலுக்கு நடிகர்கள் வருவதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அரசியலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு வயதாகி விட்டது." என நடிகர் கமல் மற்றும் ரஜினி குறித்து தெரிவித்தார்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "தமிழக மக்களின் பார்வையானது தற்போது மாறி இருக்கின்றது. நடிகர்களை அவர்கள் நடிகர்களாகவே பார்க்கின்றனர்.

Image result for rajini kamal seithipunal

ஆனால் வயது மூப்பின் காரணமாக நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது போல எம்ஜிஆர் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை தற்போதைய நடிகர்களால் நிச்சயம் ஏற்படுத்த முடியாது.

எனவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இருக்கவில்லை." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan says about rajini kamal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->