உள்ளே புகுந்த முக்கிய புள்ளி., திருமாவளவன் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் திடீர் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இன்று திமுக தலைமையில் வேளாண் மசோதாக்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை நகரிலும் திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு விரோதமாக இயற்றப்பட்ட சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களை கண்டித்து கடலூர் திமுக கூட்டணி சார்பில், கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டார்.

அந்நேரம் அவ்வழியாக சென்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி இந்த ஆர்ப்பாட்டத்தை பார்வையிட்டார். அங்கே சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்ததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்களை அழைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தரவிட்டார். இதனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை தடைசெய்ய கூடுமோ என்ற அச்சத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்கள் வீர ஆவேசமாக கோஷமிட்டனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்லிவிட்டு சென்று விட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan protest in cuddalore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->