தொகுதி விழாவிற்கு அழைக்காத தமிழக அரசு! எம்பி திருமாவளவன் டிவிட்டரில் முதலமைச்சருக்கு சுட்டல்!  - Seithipunal
Seithipunal


சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். இந்த தொகுதிக்குள் வரும் அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தன்னை இதுவரை ஒரு மக்கள் பிரதிநிதியாக கூட அழைக்கவில்லை என டுவிட்டரில் புலம்பியுள்ளார். 

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்திற்கு மட்டும் பல மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரிகள், மத்திய அரசு மாநில அரசு கூட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இடையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டது. 

தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில் நாளை அரியலூர் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. 

இந்த விழாவிற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு சம்பிரதாய அழைப்பை கூட எனக்கு அனுப்பவில்லை இது என்ன நியாயமோ? என திருமாவளவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மருத்துவக் கல்லூரிகள் ஆனது மாநில அரசு நிதியை மட்டும் கொண்டு கட்டப்படவில்லை மத்திய அரசின் நிதியையும் கொண்டுதான் கட்டப் படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan MP Tweet To CM and Health Minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->