ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க கூடாது - திருமாவளவன் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் முறையை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதற்கு, விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அட்டைகளில் ஏற்படும் மோசடிகளை தடுக்கலாம். 

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் முறையை சட்டமாக்க சிதம்பரம் மக்களவை தொகுதி திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல்கள் திருத்த சட்ட மசோதா, வாக்காளர் அட்டையிலுள்ள விவரங்களை ஆதார் அட்டையுடன் இணைக்கிறது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆளுங்கட்சி தமக்கு எதிரான வாக்களர்களை அல்லது சமூகத்தினரை வாக்காளர் பட்டியலிலிருந்தே அப்புறப்படுத்துவதற்கு இடமளிக்கும்." என்று திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma against voter id aadhar link


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->