மேட்டுப்பாளையம் கோர சம்பவத்தில் 17 பேர் பலியான துயரம், வெளியே வராமல் மறைக்கப்பட்ட பகீர் பின்னணி! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில், ஏரளமான வீடுகள் இருந்தாலும், மழையால் எந்த வீடும் இடிந்து விழவில்லை. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததால், மேட்டுப்பாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்த நிலையில்தான், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், இன்று அதிகாலை 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இந்த கோர விபத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேரின் குடும்பங்களுக்கும், தலா 4 லட்சம் ரூபாயை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த துயர சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பவ நடைபெற்ற இடத்திலும் எந்த வீடும் தானாக இடிந்து விழவில்லை. மாறாக வீடுகளின் அருகில் உயரமாகக் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர்தான் இந்த வீடுகளின் மேல் விழுந்துள்ளது என தெரியவந்துள்ளது. தனி நபருக்கு சொந்தமான சுவர் விழுந்தே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை வீடுகள் இடிந்து விழுந்ததாகவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் நடைபெற்ற பகுதியில் வீடுகள் தாழ்வான பகுதியில் இருக்கின்றன. விபத்துக்குள்ளான சுற்றுச் சுவர், 20, 25 அடி உயரத்தில் சுமார் 80 அடி நீளத்தில் இருக்கிறது. நீண்ட காலமாகவே, சுற்றுச்சுவர் ஆபத்து நிறைந்தது என எத்தனை முறை சொன்னாலும் கேட்கவில்லை. அந்த அலட்சியத்தில் தான் கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the real reason behind mettupalayam Disaster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->