தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் முக்கிய பதவி!! இன்ப அதிர்ச்சியில் தங்கம் !! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தார். தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவிலிருந்த கரூர் தொகுதி எம்.ல்.ஏ செந்தில் பாலாஜி, தேனி எம்.ல்.ஏ தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வந்தனர். இதனையடுத்து 18 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அ.ம.மு.க என்ற கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினர் கட்சி தொடங்கிய காலம் முதல் தினகரனுக்கு முக்கிய தளபதியாக இருந்தவர்கள் கரூர் செந்தில் பாலாஜி, தேனி தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.ல்.ஏ வெற்றிவேல். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியும் பறிபோனது.

இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அ.ம.மு.கவிலிருந்து விலகிய கரூர் செந்தி பாலாஜி திமுகவில் இணைந்தார். இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் அரவங்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், தினகரன் முக்கிய தளபதியாக விளங்கிய தங்க தமிழ்செல்வன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ.ம.மு.க சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தார். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் தினகரன் மேல் அதிருப்தியில் இருந்து வந்த தங்க தமிழ்செல்வன்.  

இதனைத்தொடர்ந்து, அமமுக கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக தங்க தமிழ்செல்வனை தினகரன் எச்சரித்தார். இந்த பிரச்சனை ஒரு படி மேலே சென்று இருவரும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர். அப்போது டிடிவி தினகரன் தங்கதமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்தார். தங்கதமிழ்செல்வன் என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக நடுங்குவர் என தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த  தங்க தமிழ்செல்வன் அப்போது அவர் கூறியவை:- ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என தெரிவித்தார். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு இனி அரசியலில் மூன்று நாமம்தான் கிடைக்கும் என தெரிவித்தார் 

இதனையடுத்து, நேற்று காலை 12 மணியளவில் சென்னை அண்ணா அறிவலயம் சென்ற தங்க தமிழ்செல்வன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து  தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன் தேனியில் பிரமாண்ட மேடை அமைத்து  தனது ஆதரவாளர்களுடன் இணைப்பு விழாவை கோலாகலமாக கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்தார். 

திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வனுக்கு என்ன பதவி வழங்குவார்கள் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து திமுகவின் தரப்பில் இருந்து அமமுகவிலிருந்து வெளியே வந்து திமுகவில் சேர்ந்த செந்தில்பாலாஜியை போன்றே தங்க தமிழ்செல்வனுக்கும் முக்கிய பொறுப்பை வழங்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

அதிமுகவில் தேனி  மாவட்ட செயலாளராகவும் அதன் பின்னர் அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் தேனி மாவட்ட செயலாளர் பதவி வகித்து வந்த தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவில் தேனி மாவட்ட செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உள்ளதாகவும் உறுதிப்டுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangatamilselvan new post in dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->