கன்னியாகுமரி தொகுதி! திமுகவுக்கா? காங்கிரசுக்கா?! பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி தான் மீண்டும் போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதற்கிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று, காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். இன்று வ ஊ சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த தங்கபாலு, நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவு காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு. தற்போது அந்த தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வெற்றி பெற்ற தொகுதி ஆகும். எனவே அங்கு காங்கிரஸ் கட்சியை மீண்டும் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கட்சி மேலிடம் முடிவு செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangabalu press meet about by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->