மீண்டும் தமிழக முதல்வராகப்போகும் ஓபிஎஸ்? வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக 09 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

தேனி தொகுதி அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்செல்வன், நடந்து முடிந்த தேர்தல் குறித்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, எடப்பாடி பழனிசாமி தூக்கிவிட்டு, பாஜக ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராகும்.

ஓபிஎஸ் மகன் தேனி தொகுதியில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட வரவேற்று இருப்பேன். தேனி மக்களவைத் தொகுதியில் மகனை ஜெயிக்க வைக்க ஓபிஎஸ் பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகளை கைவிட்டது ஏன்? எங்களுக்கு பரிசு பெட்டி வழங்கப்பட்டது மிகப்பெரிய மைனஸ். இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thanga tamilselvan press meet in ops


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->