மத்திய அரசை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்த தம்பிதுரை! - Seithipunal
Seithipunal


இன்றைய பட்ஜெட் உரை மீதான மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரையின் பேச்சு தரமானதாக இருந்தது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அடித்து துவைத்து விட்டார்.

ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்டதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர் மத்திய வேலைவாய்ப்பின்மை பிரச்னை சரி செய்வதில் அரசு தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய தொகை ரூ.10000 கோடியை தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு தரவில்லை, இதுதான் கூட்டாட்சி தத்துவமா?என்று மத்திய அரசை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.

மத்திய அரசு  தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கையே தவிர அது பட்ஜெட் அல்ல என்றும் குற்றம் சாட்டினார்.

தம்பிதுரையின் பேச்சில் பல முரண்பாடுகளும் மாற்றுக் கருத்துக்களும்  இருந்தாலும் மாநில அரசின் குறிப்பாக தமிழக அரசின் கோரிக்கைகளையும் குறைகளையும் நிலைநாட்ட தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்க  அழுத்தம்  திருத்தமான தம்பிதுரையின் கருத்துக்கள் பாராட்டுக்குரியவை. 

ஏனென்றால் தேர்தல் கால கூட்டணி என்பது வேறு, நட்பு  என்பது வேறு,மாநில அரசின் உரிமைகள் என்பது வேறு.

English Summary

Thambidurai says Budget 2019


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal