லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவது தான் அதிமுக!! அமைச்சர் தம்பிதுரை!!  - Seithipunal
Seithipunal


அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இந்திய தேர்தல் ஆணையமே தேர்தலை அறிவித்துவிட்டு கருத்துக்கேட்பது சரியல்ல. பொங்கல் பண்டிகை வருவதால், ஜனவரியில் தேர்தல் நடப்பதும் சரியல்ல. எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்" என்றும்,

தேர்தல் நாட்களில் பொங்கல் வருவதால், ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்றும், துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.  "இதேபோல், திமுக ஆட்சியின் போது, பென்னாகரம் இடைத்தேர்தல் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதே போல இந்த தேர்தலும் தள்ளி வைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது" 

எப்பொழுதும் தேர்தலின் கடைசி சமயத்தில் வேட்ப்பாளரை அறிவிப்பது தான் எண்களின் வழக்கம். அதை தான் இப்பொழுதும் செய்வோம். திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தால், சுமார், ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்" என திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் குடும்பத்தினருடன் தம்பிதுரை சுவாமி தரிசனம் செய்து முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambidurai says about thiruvaru by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->