பாஜகவுடன், அதிமுக கூட்டணியா? அதிமுக எம்பி தம்பிதுரை பேட்டி!
Thambidurai Press Meet
வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.
இதனிடையே இன்று தமிழக பாஜகவினருடனான கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பாஜக பின்பற்றும் என்றும், பழைய நண்பர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளாலாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் தான் கூட்டணி சேர போகிறது என திமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்தது.
இந்நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை, ஆட்சியில் மட்டும் தொடர்பு இருக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.