மொத்தமாக எம்எல்ஏக்களை இழந்த காங்கிரஸ்! சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு! கட்சி காலியான பரிதாபம்!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதன்பிறகு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், அதில் ஒருவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தற்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணைக்க கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஹித் ரெட்டி, சந்திரசேகர் ராவ் மகனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

காங்கிரசில் மொத்தம் உள்ள 18 எம்எல்ஏக்களின் வெளியேற விரும்புவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளதால், கட்சி தாவல் தடைச்சட்டத்தல் எந்த பிரச்சனையும் இல்லை. இன்று அவர்கள் 12 பேரும் சபாநாயகரை சந்தித்து தங்களை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைக்க கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் தெலங்கானாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் சபாநாயகர் நரசிம்ம ஷாரியாலு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana congress mla joined trs party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->