திமுக தேர்தல் அறிக்கையில்., தமிழகத்தில் பூரண மதுவிலக்கு.,?  - Seithipunal
Seithipunal


இன்று பகல் பன்னிரண்டு முப்பது மணிக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அப்போது முக ஸ்டலைன் பேசுகையில், 

"தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் நாயகனாக இருக்கும். நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதையே சிலர் தேர்தலில் நாயகன் என்று அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் இரண்டாவது நாயகனாக தேர்தல் அறிக்கையை என்று வெளியிட உள்ளேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க டி ஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அறிவிப்புகள்:

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.

* கடும் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் மீதான விசாரணையை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

* முதல்-அமைச்சர் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களில் தீர்வு காணப்படும்.

* அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படும்.

* சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

* பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார மேம்படுத்தப்படும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது.

* கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும்.

* ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்படும்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்.

* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

* மின்சார கட்டண முறைகள் மாதம் ஒருமுறை கட்டும் விதமாக மாற்றப்படும்.

* தமிழகம் முழுவதும் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்.

* ஈழ படுகொலைக்கு சர்வேதேச விசாரணை நடத்த கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* நீட் தேர்வை ரத்து செய்வதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

* போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.

* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம்.

* ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும். கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்.
 
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

* இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு.
 
* வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படும்.

* மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

* மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும். தமிழகம் முழுவதும் 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
 
* விவசாயிகள் மின் மோட்டார் வழங்க ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
 
* புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பகுதி நேர ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்.

* நகரங்களில் ஆட்சேபம் இல்லாத நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும்.

* முதியோர் உதவித் தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.
  
* கடன் சுமையை சரிப்படுத்த பொருளாதார குழு அமைக்கப்படும்.

* தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு.
 
* பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
 
* 8-ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படும்.
* நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
 
* ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
 
* அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின் வழங்கப்படும்.

(குறிப்பு: பூரண மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்புகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை)
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac issue DMK manifesto


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->