மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக, திமுக!! மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் உள்ள அஞ்சலக உதவியாளர், தபால்காரர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை இதுவரை நிரப்பி வந்தது. 

இந்நிலையில், தபால் நிலைய  பணியிடங்களில் சேருவதற்கான தேர்வு எழுதும் முறையில் புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை தற்போது அகொண்டுவந்துள்ளது. அதன்படி, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய எழுத்து தேர்வில், விருப்ப மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பிற பணி இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் இந்திய தபால் துறை அறிவித்திருந்தது.

இதற்கு தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடக்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்.

தபால் துறை தொடர்பான புதிய அறிவிப்பு குறித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மாநிலங்கலவையில் கேள்வி எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் முரளிதரன் தபால் துறை தேர்வு விவகாரம் மிக முக்கியமானது, இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், ஆய்வுக்கு பின் முறையான பதிலை நாளை காலை தெரிவிப்போம் என தெரிவித்தார். இருப்பினும் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu mp's protest for postal exams


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->