ஆறரை மணி நேர விசாரணைக்கு பின் வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி!!  - Seithipunal
Seithipunal


4 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட  நிலையில் அமைச்சர்  விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார். இந்நிலையில் ஆறரை மணி நேர விசாரணைக்கு பின் ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியே வந்தார்.

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
 
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக விசாரிக்க, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர்,  உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ  மருத்துவர்கள்  உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, இன்று காலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி உள்ளார். 

ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பபட்ட நிலையில் முதல்முறையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகினார். 

இந்நிலையில், ஆறரை மணி நேர விசாரணைக்கு பின் வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பது உண்மையல்ல, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். எனக்கு தெரிந்த எல்லா உண்மையும் ஆணையத்தில் தெரிவித்தேன் என்றார். 
 

English Summary

Tamilnadu Minister Vijay Baskar Press meet


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal