தமிழகத்தின் முக்கிய கட்சியின் பொதுச் செயலாளர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில பொது செயலாளர் ஜான் மோசஸ் இன்று காலை காலமானார்.  

ஜான் மோசஸ் மதுரை சேதுபதி வளாகத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த பாரதியார் பிறந்த நாள் விழாவில் கடைசியாக பங்கேற்றார். அதன்பிறகு, உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ஜான் மோசஸ் காலமானார். இவர் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றினார். பிற்காலத்தில் கட்சியாகவும், ஜனதா தளமாகவும் மாறிய போது அக்கட்சியில் தொடர்ந்து பயணித்தார்.

அதன் பிறகு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி ஜான் மோசஸ் காலமானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu janata dal general secretary passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->