சற்றுமுன் : 8 வழி சாலை திட்டத்தில் புதிய திருப்பம்! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்தது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வரவேற்று பேசியது. பின்னர் தேர்தல் நேரத்தில் எதிர்ப்பதாக கூறியது. 

பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிராக களமிறங்கியது.  குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து கருத்து கேட்டு, அவர்களை அழைத்துக்கொண்டு நேராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்தி, அதனை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 

இதனையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் நிலங்களை விவசாயிகள் ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தடை விதித்து வெளியிட்ட தீர்ப்பினை, ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணையானது வருகின்ற 3ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு வழி சாலை திட்டம் தேவை இல்லை என மக்களிடையே பேசி வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது போராட்ட களத்தில் இறங்குமா? அல்லது ஒளிந்து கொள்ளுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt appeal in supreme court in 8 lane road case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->