இறுதி நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் ஆதரவு.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் 97 மக்களவைத் தொகுதிகளுக்கு உண்டான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. 

இதனையடுத்து இன்று மாலையுடன் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரம் நிறைவு பெறவிருக்கும் நிலையில்., அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் அவர்களின் கொள்கை மற்றும் மக்களின் நலன் குறித்த தகவலுடன் இறுதிக்கட்ட பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளை தவிர்த்து பல்வேறு மக்கள் நல அமைப்பு சங்கங்கள் மூலமாகவும் கட்சிகளுக்கு பல்வேறு வகையில் ஆதரவு கிடைத்து வருகிறது. தமிழக பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தீப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தற்போது அண்ணா திராவிட முன்னேற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பதிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் பட்டாசு தயாரிப்பிற்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து., பட்டாசு நகரம் சிவகாசி களையிழந்து., பட்டாசு ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதியடைந்தனர். 

இந்த நிலையில்., இந்த பிரச்னையை முடிவிற்கு கொண்டு வர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமல்லாது பிற கட்சிகளும்., தமிழர்களின் நலனை எண்ணி பணியாற்றி வரும் பாட்டாளி மக்கள் கட்சியும் தீர்வுக்கு கொண்டு வர போராடி தீர்வை பெற்றது. 

இதனையடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உள்ள கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகர்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக பட்டாசு தொழிலார்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu firework party members support admk alliance member dmdk alagarsamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->