திமுக கூட்டணியில் இந்த கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியா.? வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும், அடுத்த ஆட்சி அதிமுகவுடன் அதிமுக ஆட்சிதான் என அமைச்சர்களுக்கு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அடுத்த 8 மாதங்களில் திமுக ஆளும் கட்சியாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் பதவி தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநில தலைமைக்கு அனுப்பி விட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், சென்னை மாவட்ட மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸுக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. சில தொலைக்காட்சி ஊடகங்களில் வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu congress statement for deputy cm post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->