திமுக கூட்டணி முறிகிறது?! உச்சகட்ட அதிருப்தியில் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை! அதிர்ச்சியில் திமுக!  - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நாளை ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், ஒன்றிய ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை தராதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே ஆர் ராமசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. 

தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை. திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை இரண்டு இடங்கள் மட்டுமே திமுக தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி, ஏன் துணைத் தலைவர் பதவியை கூட இதுவரை வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu congress no satisfied with DMK in local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->