#Breaking: அதிமுக கூட்டணி மாஸ் வெற்றி.. தேமுதிகவுக்கு கண்டனம்.. முதல்வர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தேர்தல் அறிக்கை யார் வேண்டும் என்றாலும் வெளியிடலாம், அதனை அதிமுக அரசு தான் ஆட்சியமைத்து செயல்படுத்தும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " அதிமுகவின் நிலைப்பாடு நீட் தேர்வு தமிழகத்தில் இருக்க கூடாது என்பது தான். அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. சட்டமன்ற வேட்பாளருக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போராட்டம் நடத்தி வருவது அனைத்து கட்சியிலும் உள்ளது. 

அவர்களுடன் சமாதானம் பேசி அவர்களை அமைதிப்படுத்திவிடலாம். பாண்டிச்சேரியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை நடத்தி முடிந்தபின்னர் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை. புதிய தமிழகத்துடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தினால் எங்களுக்கு பிரச்சனை இல்லை. 

தேமுதிகவினர் பேசுவது சரியானதல்ல. கூட்டணியில் இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லலாம். ஆனால், அவதூறாக பேசுவது சரியானதல்ல. தேமுதிக பக்குவமில்லாத அரசியலை செய்து வருகிறது. 

கட்சிகளுக்கான வாக்கு வங்கியை பொறுத்து தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானம் செய்யப்படுகிறது. வேட்பாளர்கள் அதிருப்தி இருக்கும் பட்சத்தில், அவர்களிடம் பேசி அமைதிப்படுத்தி வருகிறோம். அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், எங்களின் அறிக்கையில் உள்ளதை பாருங்கள். உங்களுக்கே புரியும். அதிமுக கூட்டணி பெரும்பாலான தொகுதியில் வெற்றியடையும். 

மக்கள் வாக்களித்து தனது அரசை தீர்மானம் செய்கிறார்கள். மக்கள் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து சரியான தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தேர்தல் அறிக்கை யார் வேண்டும் என்றாலும் வெளியிடலாம், அதனை அதிமுக அரசு தான் ஆட்சியமைத்து செயல்படுத்தும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet at Salem about TN Election 2021 13 March 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->