விவசாயிக்கு எதிரா செஞ்சது எல்லாமே திமுக.. இப்பவந்து கொடிபிடிச்சா நல்லவரா?.. முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இராமநாதபுரம் மாவட்ட நலத்திட்டப்பணிகளை துவங்கி வைத்து, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த சந்திப்பில், " விவசாயி செய்யும் என்னை விவசாயி என்று தான் கூறிக்கொள்ள இயலும். விவசாயம் செய்யத்தவருக்கு என்ன தெரியும். விவசாயிக்கு நன்மை செய்யும் திட்டங்களுக்கு கட்டாயம் ஆதரவளிப்போம். விவசாயிகளுக்கு எதிராக இருந்தால், அதனை கட்டாயம் நாங்கள் எதிர்ப்போம். 

டெல்டா பகுதியில் மீத்தேன் எடுப்பதற்கு திமுக தான் கையெழுத்திட்டது. இதனை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அம்மாவின் அரசு. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசிடம் வாதாடி போராடி வெற்றி பெற்றுள்ளோம். 

ஸ்டாலின் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் முனைப்புக்காட்டி இருந்ததை மறுக்க இயலாது. நான் முதல்வராக பதவியேற்ற பின்னர் சட்டக்கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரிகளை அதிகளவு கொண்டு வந்துள்ளேன். வெற்று அறிவிப்பு விடுவதற்கு நான் என்ன ஸ்டாலினா?.. நாங்கள் சொல்வதை செய்வோம். 

முன்னதாக சசிகலா விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு, இந்த கேள்வி கேட்க இது சரியான இடம் இல்லை என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Press meet 22 September 2020 in Ramanathapuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->