நான்கு மாதத்திற்க்கு பிறகு தமிழகத்தில் அரங்கேறப்போகும் அரசியல் சம்பவங்கள்!! இன்று முதல் பரபரப்பில் தமிழக அரசியல்!! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் பின்னர் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.  அடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தமிழக சட்டசபை கூட்டம் கூடவில்லை. 

நான்கு மாத இடைவெளிக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 23 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள் பற்றிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள் இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

மேலும் மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு எனவும் தெரிவித்த சபாநாயகர். 

திமுக கொண்டுவரவுள்ள சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1 ஆம் தேதி நடக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் அட்டவணை:-

ஜூன் 28 ஆம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்

 29, 30 அரசு விடுமுறை, ஜூலை 1 ஆம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறை, 2 ஆம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை

மேலும் இந்த கூட்டத்தில் சட்டசபை மானிய கோரிக்கையின் போது துறைசார்ந்த விவாதங்கள். புதிய அறிவிப்புகளை வெளியிடுவது எவ்வளவு நிதி ஒதுக்குவது பற்றிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு சட்டசபை கூட்டத்தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu assembly meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->