அரியலூர் உட்பட மேலும் 4 மருத்துவக்கல்லூரிகள்! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு! எந்த எந்த மாவட்டம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் சுகாதாரத்துறை சார்பில் 5000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழாவானது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு பேசிய முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்திற்கு மேலும் 4 மருத்துவக்கல்லூரிகள் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தமிழகத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் திருப்பூர், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை மத்திய சுகாதாரத் துறை அனுப்பியது. மேலும் சில தினங்களுக்கு முன்  கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் மருத்துவ கல்லூரிகள் அனுமதி பெற்ற தமிழக அரசு, தற்போது காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அனுமதி கேட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

அரியலூர் பெரம்பலூர் கடலூர் நாகப்பட்டினம் என அடுத்தடுத்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது நாகப்பட்டினம் அனுமதி பெற்றுவிட்ட நிலையில், கடலூர் அரியலூர் கள்ளக்குறிச்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது,வட தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். 

புதிய மருத்துவக் கல்லூரிகள்  தொடங்குவதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான எண்ணிக்கையானது அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வினால் முழு பலனும் சரியாக கிடைக்குமா என்பதில் சிக்கல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu applied for new medical colleges


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->