நேற்றைய ஹீரோ.. இன்று ஜீரோ.. நாளை யாரோ? தங்க தமிழ்ச்செல்வனை போட்டு தாக்கிய பிரபலம்.!! - Seithipunal
Seithipunal


தங்க தமிழ்செல்வன் மற்றும் டி டிவி தினகரன் இடையே சில நாட்களாக உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. இது ஒரு படி மேலே சென்று இருவரும் மாறி மாறி விமர்சித்து கொண்டனர். அப்போது டிடிவி தினகரன் தங்கதமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. அவரை என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக நடுங்குவர் என தெரிவித்திருந்தார். 

இதற்கு தங்க தமிழ்செல்வன், ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள்.

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தங்க தமிழ்ச்செல்வன் தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். இது அதிமுகவினருக்கும், தினகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், தமிழிசை தங்க தமிழ்செல்வன் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்...செய்தி......நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ? அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்? ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை. இதில் எங்கே பாஜக இயக்குகிறது? என்று தாக்கி பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai tweet about thanga tamilselvan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->