என்னால் தமிழகத்தை விட்டு விலக முடியாது.! நான் இதை தான் செய்வேன்.! - சபதம் எடுத்த தமிழிசை.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே பாலமாக செயல்பட போவதாக தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "கவர்னர் பதவி என்பது பாஜக எனக்கு அளித்துள்ள அங்கீகாரம். தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் எனக்கு உறவிற்கான அங்கீகாரத்தை வழங்கி வருகின்றனர். 

tamilisai, seithipunal

அனைத்து கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், பொதுமக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், ஆதரவும் என்னை நெகிழ வைத்து திக்குமுக்காட வைக்கின்றது. என்னை பொறுத்தவரை தமிழகத்திற்கு வளர்ச்சியை கொண்டுவர பணியாற்ற வேண்டியது எனது உரிமை. 

அதுபோல, தெலுங்கானா மக்களுக்காக பணியாற்ற வேண்டியது எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமை. என்னால் தமிழகத்தை விட்டு விலகி வர முடியாது. எனவே, இரண்டு மாநிலத்திற்கும் இடையே நான் பாலமாக செயல்படுவேன். 

இன்று மாலை தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வருகின்றனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பதவி ஏற்பு தேதி குறித்து தகவல்கள் உறுதி செய்யப்படும்." என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILISAI SPEECH IN CHENNAI BJP OFFICE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->