ஸ்டாலினை போல பழமொழியை மாற்றி கூறிய தமிழிசை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்கள் இவர்மீது எழுந்தாலும் அனைவராலும் பாசத்திற்குரிய சகோதரி என்று கூறப்படும் பெருமை தமிழிசையை தான் சேரும். எவரையும் தனிநபர் விமர்சனம் செய்யாமல் மோசமான விமர்சனங்களை வைக்கும்போது கூட அதை மரியாதையாக கூற முடியும் என்றால் அது இவரால் மட்டும் தான் சாத்தியம்.

இந்நிலையில் தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை தற்போதைய காலகட்டத்தில் வேகத்தை விட வேகம் தான் முக்கியம் என மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றார்.

சமீபத்தில் இவர் தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்த நிலையில் மதுரையில் இருக்கும் மருத்துவ கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை கலந்து கொண்டார். அப்பொழுது மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியவர், "தற்போதைய காலகட்டத்தில் வேகத்தைவிட விவேகம் தான் முக்கியம்.

தேர்வுநடை பெறுவதற்கு முன்னால் படித்தால் எந்தவிதமான நன்மையும் ஏற்படாது. அன்றைய பாடங்களை உடனேயே படித்து முடிப்பது நல்லது." என தெரிவித்துள்ளார். பொதுவாக அனைவரும் கூறும் பழமொழி, "வேகத்தைவிட விவேகம் (புத்தி கூர்மை) முக்கியம் என்பதுதான். ஆனால், தமிழிசை தற்பொழுது அதனை மாற்றி கூறியிருப்பது சமூகவலைத்தளத்தில் விமர்சிக்கத்தக்க ஒன்றாக மாறியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai says proverb


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->