இந்தி மொழி எதிர்ப்பு.!! தமிழிசை கூறிய ஒற்றை வார்த்தை.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகர நல்லூரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆரம்ப பள்ளியில் பொது நல சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அவரது குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அப்பொழுது பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி நான் போராட்டம் செய்கிறேன் என கூறுகிறார். போராட்டம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. மக்கள் நல திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள உயர்நிலை திட்டங்களை செயல்படுத்தினால், குடிநீர் பஞ்சம் ஏற்படாது. தலைவிரித்தாடும் இந்த குடிநீர் பஞ்சம் தீர்க்க படவேண்டியது. இதனை தொலைநோக்கு பார்வையில் இதற்கு முன்பு ஆட்சி செய்த திமுக காங்கிரஸ் செய்திருந்தால், குடிநீர் பிரச்சனையை தற்போது ஏற்பட்டிருக்காது.

இந்தியை திணிக்க வேண்டும் என்ற கிடையாது. பயணிகளின் பாதுகாப்பு கருதி தான் ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெற்றது. தேவைப்பட்டால் பிற மொழியை மனமுவந்து கற்றுக்கொள்ளலாம். இன்னொரு மொழி தெரிந்து வைத்திருப்பது தவறு அல்ல" என அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai says about hindi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->