கவர்னர் பதவியை தொடர்ந்து தேசிய அளவில் தமிழிசைக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!! - Seithipunal
Seithipunal


செப்டம்பர் 1 ஆம் தேதி 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். தமிழக பா.ஜனதா தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். 

தமிழிசை சவுந்தரராஜன் தான் நாட்டில் உள்ள மாநில கவர்னர்களில் இளம்வயது கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மாநில கவர்னர்களின் சராசரி வயது 73 ஆக உள்ளது. இதுவரை பதவி வகித்த பெரும்பான்மையான கவர்னர்கள் 70 முதல் 79 வயதுக்குள் உள்ளனர். மொத்தமுள்ள 28 கவர்னர்களில் (அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு ஒரே கவர்னர்) 7 நபர்கள் 60 வயதுகளிலும், 14 நபர்கள் 70களிலும், 6 நபர்கள் 80களிலும் உள்ளனர். இதில் 

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒருவர் மட்டுமே 60 வயதுக்கு கீழ் உள்ளார். அவருக்கு வயது 58. 

தமிழிசைக்கு அடுத்த இடத்தில் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் உள்ளார் அவருக்கு வயது 60. ஆந்திர மாநில கவர்னர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் தான்அதிக வயதானவர் அவருக்கு வயது 85.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai least age governer in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->