பழங்குடியினருடன்., தமிழிசை போட்ட அசத்தலான ஆட்டம்.! #வீடியோ.!  - Seithipunal
Seithipunal


பல வருடங்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு உழைத்து தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழிசை ஆளுநராக பொறுப்பேற்ற நாள் முதல் தெலுங்கு மொழி பேசியும், பாடல்கள் பாடியும், அசத்தி வருகின்றார்.

இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகையில் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது. அதில் பழங்குடியின கிராமங்களை நேரில் சென்று சந்திப்பது மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பழங்குடியினருக்கான பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்தார் மேலும் இதற்கு முன்பு பத்ராசலம் மற்றும் நாகர்கர்ணூல் போன்ற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லம்பாடா மற்றும் கோயா பழங்குடியினர் சந்திப்பின் பொழுது அந்த பெண்களுடன் தமிழிசையும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai dance in telungana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->