இதற்கெல்லாம் திமுகவே காரணம்., தமிழிசை சாடல்!! - Seithipunal
Seithipunal


வேலூர் மக்களவை தொகுதியில் வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதி நடைபெறும்.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் .

இதற்கிடையே,  கடந்த சில நாட்களாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்க்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் என புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் அனுமதியின்றி கூட்டம் நடந்த திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் நேற்று சென்று சீல் வைத்தனர்.

இதையடுத்து, ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வட்டாட்சியர் சுஜாதா ஆம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குபதிவு 
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல்  ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டியது.

டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  தமிழிசை சவுந்திரராஜன் வேலூரில் தனியார் மண்டபம் சீல் வைத்தது குறித்து அவர் கூறியதாவது, தேர்தல் என வரும் போது எதிர்க்கட்சி, ஆளுங் கட்சி எல்லாம் ஒன்றுதான். தனியார் மண்டபத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபம் சீல் வைக்கப்பபட்டதற்கு தி.மு.க.வே காரணம் என குற்றம் சாட்டினார். 

தேர்தல் நேரத்தில் யாராக இருந்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். அப்படி நடக்காததால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வேலூர் திமுக வேட்பாளர் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வேலூரில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதற்கும், தாமதமாக தேர்தல் நடப்பதற்கும் தி.மு.க.வே காரணம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai attack stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->