அன்புமணியின் இல்லத்தில் நடந்த சந்திப்பு!  - Seithipunal
Seithipunal


எம்ஜிஆர், சிவாஜி ஜெயலலிதா போன்ற பெரும் நடிகர்களை கொண்டு புகழ்பெற்ற பல படங்களை தயாரித்த லண்டன் டாக்கீஸ் கனகசபை நடராஜன். கிங்ஸ், திருடா திருடி, மன்மதன் போன்ற படங்களை தயாரித்த இந்தியன் தியேட்டர்ஸ் புரோடக்ஷன்ஸ் கிருஷ்ணகாந்த், பல விருதுகளை பெற்ற பிரதீப் கேல்கர் ஆகியோர் பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்க மறுப்பதை தடுத்து நிறுத்துதல், மக்களுக்கு அவர்கள் விரும்பும் திரைப்படங்களை பார்க்கும் உரிமையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியதற்காக, நேற்று அன்புமணியை சந்தித்து நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

ஏற்கனவே திரைத்துறையினர் பலரும் தாங்கள் பேசும் மேடைகளில் அன்புமணிக்கு நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. யாருமே பேச முன்வராத பிரச்சனையை பேசிய அன்புமணிக்கு திரைத்துறையினர் ஆதரவும், பாராட்டும்  தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil producers met with anbumani MP and thank him


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->