குடிசை வீடுகளில் உள்ளவர்களுக்காக அதிரடி திட்டத்தை அறிவித்த தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


சென்னையில் சாலைகளின் ஓரம் வசிதுவரும் மக்களுக்கு, வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர், சென்னையில், சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளின்றி தவித்து வரும் மக்களுக்காக வீடுகள் கட்ட அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பபட்டு வருவதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தில் உள்ள  குடிசை வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அதன்படி 15 லட்சம் மக்களுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வீடுகளின்றி தவித்து வரும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த துணை முதலமைச்சர்  ஒ.பன்னீர்செல்வம், தமிழகத்தை குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu government new house scheme


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->