நாளை ஆப்கான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி அமைக்கின்றனர்.! ரஷ்யா பங்கேற்கவில்லை.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து தன்னால் இயன்ற அளவு ஆப்கானிய மக்களை தனது நாட்டிற்கு அழைத்து சென்றது. மேலும், அந்தந்த நாடுகள் சார்பாக தங்களின் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஆப்கானியர்களும் மீட்கப்பட்டனர். 

இந்த சூழ்நிலையில், இடைக்கால பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் முக்கிய நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 19 பேரும் தலிபான்கள் தீவிரவாதிகள் தான். தலிபான்கள் அல்லாதவர்களை அமைச்சரவையில் சேர்க்கவில்லை.

இந்நிலையில், ஆப்கான் நாட்டில் நாளை தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதற்க்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுபட்டு இருந்தது. இதில் ரஷ்ய நாடு பங்கேற்காது என்று அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TALIBAN NEW GOVT IN AFGHAN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->