உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த பாஜகவின் முக்கிய புள்ளி.. மாறும் கூட்டணி.? அதிர்ச்சியில் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது 43வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே,  திடீரென பாஜகவை சார்ந்த நடிகர் எஸ்வி சேகர், உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் பல முறை விமர்சித்த எஸ் வி சேகர் திடீரென வாழ்த்து தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

எஸ் வி சேகர் திடீரென உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக திமுகவுடன் கூட்டணி அமைக்க உதயநிதி ஸ்டாலினை எஸ் வி சேகர் சந்தித்தாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் அதிமுக சற்று கலக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது இதுகுறித்து எஸ் வி சேகர் விளக்கமளித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் சந்திக்கச் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன். அதன்பிறகுதான் உதயநிதிக்கு பிறந்த நாள் என்று தெரிய வந்தது. 

அதனால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தேன். அவருடன் படமொன்றிலும் நடிக்கிறேன். படத்தில் நாயகனுக்கு வாழ்த்து தெரிவித்தேன். என்னை பொருத்தவரை எல்லாரும் நண்பர்கள், யாரும் எதிரி இல்லை என எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sv sekar wish for udhayanidhi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->