வரலாற்றில் இன்று : தமிழக முன்னாள் ஆளுநர்.. பிறந்த தினம்!! - Seithipunal
Seithipunal


சுர்ஜித் சிங் பர்னாலா:

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். தமிழ்நாட்டின் மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 31, 2011ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

இவர் 1942ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967ஆம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார்.

1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.

மக்களவை உறுப்பினராக 1996ஆம் ஆண்டு மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்களில் ஒருவரான சுர்ஜித் சிங் பர்னாலா 2017ஆம் ஆண்டு மறைந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suriji singh barnala birthday


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->