தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி துறைக்கான பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைதந்து. 

இதையடுத்து, இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெற வில்லை இதுகுறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. விசாரணைகளில், தமிழக அரசும், தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் பல்வேறு காரணங்களை கூறுகின்றன. மேலும் அணைத்து மாவட்டங்களிலும் தொகுதி மறு வரையறை செய்ய இருப்பதால் தேர்தல் நடத்த தமிழக அரசு கால அவகாசம் கேட்டது

இதேபோல, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை இன்னும் நடத்தாமல் இருப்பது ஏன் என்று தமிழக அரசுக்குஉச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி  கேள்வி எழுப்பினர்.இதற்கு  பதிலளித்த தமிழக அரசு, தொகுதி மறு வரையறை செய்ய இருப்பதால் தேர்தல் நடத்த தமிழக அரசு கால அவகாசம் கேட்டது. இதன் பிறகு எப்போது பணிகள்  நிறைவடையும். இதுகுறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவுயிட்டுருந்தது.

இந்தநிலையில், வார்டு வரையறை செய்யும் பணிகள் இருப்பதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த காலஅவகாசம் வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தத நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme jundgement about panjayat election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->