பொன் மாணிக்கவேல் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!  - Seithipunal
Seithipunal


நவம்பர் 30ஆம் தேதியுடன் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த பொன் மாணிக்கவேல் பணி காலமானது முடிவடைந்த நிலையில், அவரை மீண்டும் பணி நீட்டிப்பு செய்ய விரும்பாத தமிழக அரசு அவரிடமிருந்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தர விட்டது. 

ஆனால் ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து பொன்மானிக்கவேல் என்னை நியமனம் செய்தது நீதிமன்றங்கள் தான், அதனால் தமிழக அரசின் உத்தரவு கட்டுப்படுத்தாது எனக்கூறி நீதிமன்றத்திற்கு சென்றார். இதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்ற தமிழக அரசுக்கு சாதகமாக, உச்ச நீதிமன்றம் பொன்மாணிக்கவேல் ஆவணங்களை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. 

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆவணங்கள் ஒப்படைப்பதில் தாமதப்படுத்தி வந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த அசோக் பூஷன்,  ஷா அமர்வு இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என கால அவகாசம் கொடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ததை உறுதி செய்யும் விதமாக அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை அடுத்த திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.  

இன்னும் ஒரு வாரத்திற்குள் பொன்மாணிக்கவேல் அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடமும் ஒப்படைப்பாரா அல்லது பணி நீட்டிப்பு கேட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court to pon maickavel handover all documents to tamilnadu govt within week


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->